- புது தில்லி
- நல்லாட்சி தினம்
- அடல் பிஹாரி வாஜ்பாய்
- யூனியன்
- பாதுகாப்பு செயலாளர்
- ராஜேஷ் குமார் சிங்
- தின மலர்
புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், நேற்று கொண்டாடப்பட்ட நல்லாட்சி தினத்தின் ஒரு பகுதியாக, ராஷ்ட்ரபர்வ் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சக செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் குடியரசு தினம், சுதந்திர தினம், முப்படைகள் பாசறை திரும்புதல் போன்ற தேசிய நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது, அதற்கான டிக்கெட் விற்பனை, இருக்கை ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளின் வழித்தட வரைபடம் போன்ற தகவல்களை வழங்கும். பாதுகாப்பு அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், மாநில அரசுகள், அமைச்சகங்களின் அலங்கார ஊர்தி தொடர்பான தகவல்களையும் நிர்வகிக்கும்.
The post தேசிய நிகழ்ச்சிகளுக்கு தனி வெப்சைட் அறிமுகம் appeared first on Dinakaran.