- மதிமுக
- மேலூர்
- வைகோ
- சென்னை
- பொதுச்செயலர்
- யூனியன் அரசு
- இந்துஸ்தான் ஜிங்க்
- வேதாந்தா
- நாயக்கர்பட்டி, மேலூர்
- தூத்துக்குடி...
- தின மலர்
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: மேலூர், நாயக்கர்பட்டியில் உள்ள டங்ஸ்டன் கனிமத்தைத் தோண்டி எடுப்பதற்கு 5,000 ஏக்கர் பரப்பளவில் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 16 பேரைச் சுட்டுக் கொள்வதற்குக் காரணமான வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு மீண்டும் மக்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கான அனுமதியை ஒன்றிய பாஜக அரசு வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தி 2025 ஜனவரி 3ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் அருகில் மதிமுக சார்பில் எனது தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.மதுரை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ள வேண்டும்.
The post டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூரில் ஜன.3ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.