×

மீண்டும் இணையும் ராவணன் ஜோடி

மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் விக்ரமும் ஐஸ்வர்யாராயும் முதன்முறையாக இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தார்கள். இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரமும், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் விக்ரமும், ஐஸ்வர்யாராயும் இணைந்து நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது கமலஹாசன் நடிக்கும் 234 வது படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியிருக்கும் மனிரத்னம், இந்த படத்தை இயக்கி முடித்ததும் விக்ரம், ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.

The post மீண்டும் இணையும் ராவணன் ஜோடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ravanan ,vikram ,aiswaryaraya ,maniratnam ,aditya karigalan ,aiswarya roy ,nandini ,Ravanton ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வல்லவன் வகுத்ததடா விமர்சனம்