×

திமுக வழக்கறிஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச. 25: ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருவாரூரில் திமுக வழக்கறிஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர் அம்பேத்கர் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் நேற்று திருவாரூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் விநாயகமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post திமுக வழக்கறிஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK Lawyers' ,Tiruvarur ,DMK Lawyers' Team ,Union Minister ,Amit Shah ,Dr. ,Ambedkar ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருவாரூரில் நடப்பாண்டில் 50 ஆயிரத்து...