- மாநிலத்திற்கு மருத்துவர்களின் சங்கம்
- சென்னை
- சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்
- ரவீந்தரநாத்
- பொதுச்செயலர்
- பொது நலன் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம்
- தமிழ்நாடு அரசு
- மருத்துவர்கள் சங்கம்
- தின மலர்
சென்னை: சென்னையில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது:
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கடந்த மாதம் வெளியிட்ட அரசாணையில், ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் மற்ற பரிசோதனை நிலையங்கள் செயல்படத் தேவையான அளவு இடவசதி குறித்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி நகர்புறத்தில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்கள், ஜெனிடிக் பரிசோதனை நிலையங்கள், நோய்குறியியல் பரிசோதனை நிலையங்கள் மற்ற பிறவற்றிற்கும், 500 முதல் 700 சதுர அடி பரப்பளவும், கிராமப்புறத்தில் உள்ள இத்தகைய பரிசோதனை நிலையங்களுக்கு 300 சதுர அடி பரப்பளவும் இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அரசாணை பெரிய மற்றும் கார்ப்பரேட் கிளினிக்கல் ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. அவற்றின் வளர்ச்சிக்காக, லாப வேட்கைக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை மூடுவிடும் வகையில் உள்ளது. எனவே, இந்த அரசாணையை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.
The post சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை காக்க வேண்டும்: அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.