×

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை சிறப்பாக செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை சிறப்பாக செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 4வது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 750 ரூபாய் வழங்கியுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்திய ரூபாய் மதிப்பில் ₹1 கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளதோடு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்ட வாழ்த்துரைச் செய்தியும் வாசிக்கப்பட்டது. அதில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கையை நிறுவிட சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்.

தமிழ்ப் பண்பாட்டின் குன்றாத வளமையைப் பாரெங்கும் பறைச்சாற்றுவதிலும், எதிர்கால தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் தமிழர்களின் வர்த்தகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் ஹூஸ்டன் தமிழாய்வுகள் இருக்கை சிறப்பான பங்காற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்ற முதல்வரின் வாழ்த்துச் செய்தி 12.12.24 பகல் 2 மணியளவில் அமெரிக்காவில் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பாக நடைபெற்ற விழாவில் படிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் மற்றும் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.

The post ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை சிறப்பாக செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Houston ,Chennai ,University of Houston ,America ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!