×

சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாக பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர்; தாமதப்படுத்தினாலும் இறுதியில் சரியான கைகளில் சாகித்ய அகாடமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்’ என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்ற இலக்கிய விமர்சன நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்; “தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் ‘தோழர்’ ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது பாராட்டுகள்!

தாமதப்படுத்தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்திய அகாதெமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்!” என முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,S. Tamilchelvan ,Chennai ,Sahitya Academy ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக...