×

தேனியில் தடையை மீறி போராட்டத்திற்கு புறப்பட்டவர்கள் மீது வழக்கு

தேனி, டிச.25: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நேற்று முன்தினம் தேவேந்திரகுல அமைப்புகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நேற்று முன் தினம் காலை 10 மணிக்கு தேனி பழனிசெட்டிபட்டி அருகே போடிவிலக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை நிர்வாகிகள் 11 பேர் காரில் பரமக்குடி புறப்பட தயாராக இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

The post தேனியில் தடையை மீறி போராட்டத்திற்கு புறப்பட்டவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Theni ,Devendrakula ,Paramakudi, Ramanathapuram district ,Theni… ,Dinakaran ,
× RELATED எஸ்.பி.அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி