தேனி, டிச.24: தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் தனது மூன்று குழந்தைகளுடன் வந்த தாய், திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு நேற்று காலை, பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் வந்தார். எஸ்.பி கார் நிற்கக்கூடிய போர்டிகோ அருகே வந்தவர் திடீரென அவர் கொண்டு வந்திருந்த பையில் இருந்து பெட்ரோல் பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயன்றார்.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் இதனை தடுத்து, பெண்ணிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தார். தொடர்ந்து இது குறித்த விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண், பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் கிராமத்தை சேர்ந்த சரவணன் மனைவி மகாலட்சுமி(30) எனவும், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதகாகவும், அவர் மீது நவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது.
The post எஸ்.பி.அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.