×

அணுமின் நிலைய திட்ட ஊழல் வழக்கு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக விசாரணை தொடக்கம்

டாக்கா: வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு எதிரான அணுமின் நிலைய ஊழல் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஆகஸ்ட் மாதம் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசினா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். வங்கதேசத்தில் ரஷ்யாவின் அரசு நிறுவனமான ரோசாடோம் மூலமாக ரூப்பூர் அணுமின் நிலைய கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் இந்திய நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

ரூப்பூர் அணுமின் நிலைய திட்டத்தில் நிதிமுறைகேடு நடந்துள்ளதை தேசிய ஜனநாயக இயக்கத்தின் தலைவர் பாபி ஹஜ்ஜாஜ் வெளிக்கொணர்ந்தார். இந்த அணுமின் நிலையத்தில் 5 பில்லியன் அமெரிக்க டாலரை( ரூ.42486 கோடி) ஹசீனா, அவரது மகன் சஜீப், உறவினர் துலிக் ஆகியோர் மலேசிய வங்கிக்கு மாற்றி நிதி முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து ஷேக் ஹசினாவிற்கு எதிராக ஊழல் தடுப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் ஹசீனா, சஜீப் வாசேத் ஜாய் மற்றும் அவரது உறவினரும் இங்கிலாந்து கருவூல அமைச்சருமான துலிக் சித்திக் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

The post அணுமின் நிலைய திட்ட ஊழல் வழக்கு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sheikh Hasina ,Dhaka ,Bangladesh ,India ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனாவை...