×

புதிய ரேஷன் கடை திறப்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், நேமம் ஊராட்சி, நொச்சிமேடு பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்நாத் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விஜயா ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் உமாசங்கரி நாகராஜ், எஸ்.தமிழழகன், நிரோஷா மகேஷ், சி.சரவணன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரீமாவதி சிவராமன் வரவேற்றார். விழாவில் ஒன்றிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் மாரிமுத்து கலந்துகொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post புதிய ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,NEW RATION SHOP ,ANNA RENAISSANCE PROJECT ,POONTAMALLI UNION ,NAMAM ORADCHI ,NOCHIMEDU AREA ,Orati Assembly ,President ,Premnath ,Vice President ,Vijaya Ramesh ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு!