×

திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.24 கோடி பக்தர்கள் காணிக்கை

திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் கடந்த 28 நாட்களில் ரூ.1.24 கோடியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் மலைக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் நகை, பணம், காணிக்கையாக செலுத்துகின்றனர். கடந்த 28 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, மு.நாகன் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி வசந்த மண்டபத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்தது. இதில், கோயில் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணிக்கை முடிவில் திருப்பணி காணிக்கையாக ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 683 ரூபாய் உள்பட மொத்தம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 15 ஆயிரத்து, 185 ரூபாய் மற்றும் 402 கிராம் தங்கம், 8,345 கிராம் வெள்ளி பக்தர்கள் செலுத்தி இருந்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.24 கோடி பக்தர்கள் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirutani Murugan Temple ,Thirutani ,Murugan Temple ,
× RELATED கனகம்மாசத்திரம் அருகே பூட்டிய வீட்டில் நகை கொள்ளை