- திண்டிகுல்
- தெற்கு
- ஈரோடு
- நெல்லா
- திண்டுக்கல்
- திருச்சி
- செங்கட்டாய்
- தெற்கு மாவட்டங்கள்
- செங்கோட் ரயில்
- தின மலர்
நெல்லை: திண்டுக்கல் – திருச்சி ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக செய்யப்பட்ட ரயில் போக்குவரத்து மாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்ேகாட்டை ரயில் ஈரோடு வரை இயக்கப்பட உள்ளது. திண்டுக்கல் – திருச்சி ரயில் பாதை பிரிவில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக இம்மாத இறுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அம்மாற்றங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக செங்கோட்டையில் இருந்து வரும் 27, 28, 30, 31 ஆகிய நாட்களில் காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை விரைவு ரயில் (16848), குருவாயூரிலிருந்து வரும் 27, 30 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128), கன்னியாகுமரியில் இருந்து வரும் 28ம் தேதி புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹௌரா விரைவு ரயில் (12666) ஆகியவை மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது விருதுநகருக்கு பின்னர் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி என மாற்று வழியில் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு வழக்கமான பாதையிலே அந்த ரயில்கள் இயக்கப்படும். நாகர்கோவிலில் இருந்து வரும் 31ம் தேதி புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (16340), நாகர்கோவிலில் இருந்து வரும் 28ம் தேதி புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (16354), பனாரஸிலிருந்து டிசம்பர் 29 புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் விரைவு ரயில் (16368) நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து டிசம்பர் 28, 31 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் (16321/16322) ஆகிய ரயில்களும் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் வழக்கமான பாதையிலே இயக்கப்படும்.
ஈரோட்டில் இருந்து வரும் 27, 30 ஆகிய நாட்கள் புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (16845) மற்றும் செங்கோட்டையில் இருந்து டிசம்பர் 28, 31 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு (16846) விரைவு ரயில் ஆகியவை கரூர் – செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ரயில்கள் செங்கோட்டை – ஈரோடு ரயில் நிலையங்கள் இடையே முழுமையாக இயக்கப்படும்.
The post திண்டுக்கல்-திருச்சி மேம்பாட்டு பணிகள் தள்ளி வைப்பு; தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்துக்கான மாற்றங்கள் ரத்து: செங்கோட்டை ரயிலும் ஈரோடு வரை இயக்கப்படும் appeared first on Dinakaran.