×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

ராஜஸ்தான்: கோட்புட்லி – பெஹ்ரோர் மாவட்டத்தில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் சென்ட்டா என்ற 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தொடர்கதையாகி வருகிறது.

அவ்வாறு விழுந்த ஒருசில குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டாலும் பல நேரங்களில் குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதனை தடுக்க பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றை அப்படியே விடாமல் மூடுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதுபோன்ற சம்பவம் தற்போது ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், விளையாடி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

The post ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Senta ,Godputli ,Behror district ,National Disaster Recovery Team ,
× RELATED ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது பெண் குழந்தை: மீட்புப் பணிகள் தீவிரம்!