வேலாயுதம்பாளையம், டிச.24: கரூர் மாநகராட்சி பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆணையர் சுதா தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகளால் பயணிகளும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், பஸ்ஸில் உள்ளே செல்வதற்கும் இடையூறாக ஏராளமான கடைகளில் முகப்பு பகுதியில் தட்டி போட்டு அமைத்தும் தகர ஷெட் அமைத்தும் கடைகள் நடத்தி வந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் சுதா, கரூர் பஸ் நிலையத்தில் நேரடியாக ஆய்வு செய்து நகர அமைப்பு அதிகாரி மார்ட்டின், இன்ஜினியர் ரவி நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன. அகற்றிய போதிலும் இன்னும் ஒரு சில நாட்களில் கடைக்காரர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடும் என்பதால், தொடர்ச்சியாக மீண்டும் ஆக்கிரமிப்புகளை தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையை தொடங்குவார் என்பதால் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கரூர் பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் ஆணையர் நடவடிக்கை appeared first on Dinakaran.