×

மெட்ரோ ரயில்கள் இயக்கம் சீரானது

மீனம்பாக்கம்: சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 54 கி.மீ. தொலைவிற்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயங்குகிறது. இந்நிலையில், நேற்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் டெப்போவிற்கு நீல நிற வழிப்பாதையில் நேரடி ரயில்கள் 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டது. ரயில்கள் இயக்கப்படுவது தாமதமான நிலையில் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, மெட்ரோ ரயில் சேவை சீரானதாக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 8.50 மணி முதல் வழக்கம்போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மெட்ரோ ரயில்கள் இயக்கம் சீரானது appeared first on Dinakaran.

Tags : Meenambakkam ,Chennai ,Wimco Nagar ,Parangimalai ,Central ,
× RELATED துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.7...