- வெள்ளி விழா புத்தக கண்காட்சி
- வள்ளுவர்
- காஞ்சிபுரம்
- திருவள்ளுவர்
- கன்னியாகுமாரி
- காஞ்சிபுரம் அண்ணா கிளை நூலகம்
- வெள்ளி விழா…
- வள்ளுவர் சிலை:
காஞ்சிபுரம்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் அண்ணா கிளை நூலகத்தில், வெள்ளி விழா புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். மேலும், வெள்ளி விழாவினையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடக்கவுள்ளன.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் வெள்ளி விழா கொண்டாடுவதையொட்டி, ஐயன் திருவள்ளுவர் உருவபடத்திற்கு, கலெக்டர் கலைச்செல்வி மோகன் மலர்தூவி மரியாதை செலுத்தி, புத்தகக்கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை வெள்ளி விழாவாக கொண்டாடப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, சின்ன காஞ்சிபுரத்திலுள்ள அண்ணா கிளை நூலகத்தில் திருவள்ளுவர் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பார்வையிட்டார்.
இவ்விழாவானது, நேற்று (23ம் தேதி) முதல் வரும் 31ம்தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவினையொட்டி 6,7,8ம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, வினாடி – வினா மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெறவுள்ளது. இதில் முதல் பரிசு ₹5,000மும், இரண்டாம் பரிசு ₹3,000மும், மூன்றாம் பரிசு ₹2,000மும் வெற்றிப்பெற்றவர்களுக்கு கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் வழங்கப்பட உள்ளது. மேலும், 11ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ – மாணவிகளை வைத்து திருக்குறள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு 31.12.2024 அன்று பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, இரண்டாம் நிலை நூலகர் ரவி, காஞ்சிபுரம் வாசக வட்டத்தலைவர் திருவீற்கோலம், நூலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post வள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி வெள்ளி விழா புத்தக கண்காட்சி: பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் appeared first on Dinakaran.