சென்னை: கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. கலைஞர் அமைத்த சிலையை ‘பேரறிவுச் சிலை’-ஆக கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞரால் கன்னியாகுமரியில் அய்யன் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25. மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை ‘பேரறிவுச் சிலை’- ஆக கொண்டாடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post வள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டு பேரறிவு சிலையாக கொண்டாட முதல்வர் அழைப்பு appeared first on Dinakaran.