×

கிருஷ்ணகிரியில் இன்று பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு மதியழகன் எம்எல்ஏ அறிக்கை

கிருஷ்ணகிரி, டிச.24: கிருஷ்ணகிரியில் இன்று (24ம்தேதி) திமுக சார்பில், பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப் படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூட நம்பிக்கைகளை மக்களிடம் இருந்து அகற்றுவதற்காகவும், பெண் விடுதலைக்காக போராடியவருமான பெரியார் நினைவு நாள், இன்று (24ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு, எனது தலைமையில், பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் வருகை தந்து பெரியார் படத்திற்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கிருஷ்ணகிரியில் இன்று பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு மதியழகன் எம்எல்ஏ அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyar Memorial Day ,Krishnagiri ,MLA ,Mathiyazhagan ,DMK ,Krishnagiri East District ,
× RELATED ஆண்டிபட்டியில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு