மூணாறு: மூணாறு அருகே உள்ள குண்டளைஅணையில் படகு சவாரி, சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கேரள மாநிலத்தின் பிரபல சுற்றுலா தலமான மூணாறு அருகே, டாப் ஸ்டேஷன் சாலையில் சுமார் 20 கி.மீ., தொலைவில் குண்டளை அணை அமைந்துள்ளது. இந்த அணையினை மின்வாரியத்தினர் பராமரித்து வருகின்றனர். ஹைடல் சுற்றுலா சார்பில் அணையில், பெடல் மற்றும் துடுப்பு படகுகள், தேனிலவு தம்பதியினருக்காக காஷ்மீர் சிக்காரியா படகுகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பெடல் படகுகளில் பயணிக்க பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.
அதில் 30 நிமிடத்திற்கு இருவர் பயணிக்க ரூ.400, நான்கு பேர் பயணிக்க ரூ.600 என கட்டணம் நிர்ணயித்துள்ளனர். தற்போது மூணாறில் குளிர் சீசன் நடைபெற்று வரும் நிலையில், குண்டளை அணையில் இயற்கை சூழலில் படகு சவாரி செய்ய, சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். காஷ்மீர் சிக்காரியா படகுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் உள்ளதால் அதில் செல்லவும், படகுகளில் பயணித்தபடி புகைப்படம் எடுக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
The post மூணாறு அருகே குண்டளை அணையில் படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் appeared first on Dinakaran.