- சி.வி.சண்முகம்
- சென்னை
- தேர்தல் ஆணையம்
- எடப்பாடி பழனிசாமி
- சூரியமூர்த்தி
- திண்டுக்கல்
- தேர்தல் ஆணையம்…
- தின மலர்
சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் ஆஜரானார். இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரிய மூர்த்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது 8 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட் உத்தரவை அடுத்து இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
The post இரட்டை இலை சின்னம் விவகாரம்: சி.வி.சண்முகம் ஆஜர் appeared first on Dinakaran.