×

24-ம் தேதி புகழேந்தி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: அதிமுக தொடர்பான நிலுவை மனுக்கள் குறித்த விசாரணைக்கு 24-ம் தேதி புகழேந்தி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டிச.24ம் தேதி காலை 11 மணிக்கு புகழேந்தி நேரில் ஆஜராகுமாறு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. நிலுவையில் உள்ள புகழேந்தியின் மனுக்கள் தொடர்பாக விசாரணை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். தலைமை தேர்தல் ஆணைய செயலர் அஸ்வினி குமார் உத்தரவின்படி, மாநில தேர்தல் தலைமை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புகழேந்தியின் மனுக்களை பரிசீலிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் கடித நகல் கிருஷ்ணகிரி ஆட்சியர் மூலமாக அவசர கடிதமாக புகழேந்தி இல்லத்தில் வழங்கப்பட்டது.

The post 24-ம் தேதி புகழேந்தி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Pugazhendi ,Chennai ,AIADMK ,Chief Election Commission ,Dinakaran ,
× RELATED இரட்டை இலை வழக்கு விரைந்து முடிக்க...