×

உலகளவில் கொரோனா பாதிப்பு 30.59 கோடி, உயிரிழப்பு 55.02 லட்சம், குணமடைந்தவர்கள் 25.89 கோடி, தற்போது சிகிச்சையில் 4.15 கோடி பேர்

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55.02 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,502,256 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 305,992,785 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 258,949,730 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 94,056 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 4,67,145 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 859,046 பேர் மரணமடைந்துள்ளனர்.அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.09 கோடி பேராக அதிகரித்துள்ளது. மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன. கடந்த சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நாளில் டெல்டா போய் ஒமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது….

The post உலகளவில் கொரோனா பாதிப்பு 30.59 கோடி, உயிரிழப்பு 55.02 லட்சம், குணமடைந்தவர்கள் 25.89 கோடி, தற்போது சிகிச்சையில் 4.15 கோடி பேர் appeared first on Dinakaran.

Tags : Geneva ,Worldwide Corona Damage ,
× RELATED தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக...