×

மோடி அரசியலமைப்பை மதிப்பவராக இருந்தால் பதவியில் இருந்து உடனடியாக அமித்ஷாவை தூக்கி வீச வேண்டும்: காங்கிரஸ் பொறுப்பாளர் செல்லக்குமார் பேட்டி

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரும், மேகாலயா, மிசோராம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளருமான டாக்டர் ஏ.செல்லக்குமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அளித்த பேட்டி: பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டம் குறித்து 2 நாட்கள் ஒதுக்கப்பட்டு விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய பேச்சினுடைய ஆணவ குரலிலே, அம்பேத்கரை கேலியோடு பேசினார்.

நாடாளுமன்றத்திலே இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நாலாந்தர பேச்சாளராக, ஒரு தெருமுனை பேச்சாளராக நாட்டின் உள்துறை அமைச்சர் பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அமித்ஷா மன்னிப்பு கோர வேண்டும். பிரதமர் மோடி அவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். செய்யவில்லை என்றால் அவரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

அம்பேத்கரை மதிப்பவராக இருந்தால், அவரின் தியாகத்தை மதிப்பவராக இருந்தால், அர்ப்பணிப்பை ஏற்றுக் கொள்பவராக இருந்தால் அமித்ஷாவை உடனடியாக பதவியில் இருந்து தூக்கி வீசி ஏறிய வேண்டும். வரும் 24ம் தேதி இந்தியா முழுவதும் மீண்டும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில துணை தலைவர் சொர்னா சேதுராமன், ராம்மோகன், பொதுச்செயலாளர்கள் அருள் பெத்தையா, பி.வி.தமிழ்செல்வன், தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, எம்.எம்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

The post மோடி அரசியலமைப்பை மதிப்பவராக இருந்தால் பதவியில் இருந்து உடனடியாக அமித்ஷாவை தூக்கி வீச வேண்டும்: காங்கிரஸ் பொறுப்பாளர் செல்லக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,Amit Shah ,Congress ,Sellakumar ,Chennai ,Dr. ,A. Sellakumar ,All India Congress ,Meghalaya ,Mizoram ,Arunachal Pradesh ,Sathyamoorthy Bhavan ,
× RELATED மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...