×

பள்ளிகளில் இணையசேவை கட்டண நிலுவை ஏதுமில்லை: அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் 3700 பள்ளிகளில் இணைய சேவைக் கட்டண பாக்கி ரூ.1 கோடியே 50 லட்சம் நிலுவையில் இருப்பதால் அதை உடனடியாக செலுத்தாவிட்டால், இணைய சேவை நிறுத்தப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதனால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்து உடனடியாக தொகையை செலுத்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்தவிவகாரம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி, தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஆசிரியர் சம்பளம் இணைய சிக்கல்கள் இருந்ததால் எந்த விதத்திலும் இணைக்கப்படவில்லை என்றும், சம்பளம் நிலுவை குறித்து எந்த ஆசிரியரும் தகவல் தெரிவிக்கவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை ஒன்றிய அரசு சுமார் ரூ.2,151 கோடி தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி வழங்காமல் இருந்து வரும் நிலையில், சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 43 லட்சம் மாணவர்களின் நலனுக்காக எந்த சம்பள நிலவையோ எந்த கட்டண நிலுவையோ இல்லாமல் மாநில அரசு தன்னுடைய சொந்த நிதியிலிருந்து அனைத்தையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

The post பள்ளிகளில் இணையசேவை கட்டண நிலுவை ஏதுமில்லை: அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai ,BSNL ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப...