- திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம்
- திருவண்ணாமலை
- POCSO நீதிமன்றம்
- Kilpennathur
- சுரேஷ்
- சுப்பிரமணி
- வேட்டவலம் வடக்குவெளி
திருவண்ணாமலை, டிச.21: கீழ்பென்னாத்தூர் அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா வேட்டவலம் வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சுரேஷ் (30). கூலி தொழிலாளி. இவர், 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை, கடந்த 27.5.2020 அன்று கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டது. எனவே, அவரை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து, வேட்டவலம போலீசில் சிறுமியின் தாத்தா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சுரேஷ்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சுரேசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.