- திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம்
- சேத்துப்பட்டா
- திருவண்ணாமலை
- POCSO நீதிமன்றம்
- திருவண்ணாமலை மாவட்டம்
- சேதுபேட்டு
- துலுக்கும்
- வில்லிவனம்
- திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம்
திருவண்ணாமலை, டிச. 6: சேத்துப்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேல் வில்லிவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் துலுக்கானம் மகன் பிரகாஷ்(36), கூலி தொழிலாளி. திருமணமானவர். இவர், கடந்த 12.4.2022 அன்று அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கரைக்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை வழிமறித்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட பிரகாஷ் முயன்றுள்ளர். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, சேத்துப்பட்டு போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளி பிரகாசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
The post கூலித் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு சேத்துப்பட்டு அருகே 15 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை appeared first on Dinakaran.