×

செய்யாற்றில் முருகன் கற்சிலை கண்டெடுப்பு

செய்யாறு, டிச.19: செய்யாற்றில் இரண்டடி உயரமுள்ள முருகன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக செய்யாறு ஆற்றில் கடந்த சில வாரங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வெள்ளநீர் குறைந்த நிலையில் நேற்று செய்யாற்றில் குளிக்கச்சென்ற வாலிபர்கள் முருகர் கற்சிலையை பார்த்து, அதை வீடியோ பதிவு செய்து முகநூலில் பரப்பியுள்ளனர்.

இத்தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இரண்டடி உயரமுள்ள முருகன் கற்சிலை மீட்டு, வருவாய்த்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து கேட்டபோது வருவாய்த்துறையில் கற்சிலை ஆவணப்படுத்தப்படும் என கூறிச்சென்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஆற்றில் முருகன் கற்சிலை அடித்து வரப்பட்டதா அல்லது பாலம் தோண்டும் பணியின்போது மண்ணில் புதைந்து வெள்ளநீரில் வெளியே தெரிந்ததா என வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செய்யாற்றில் முருகன் கற்சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Lord Murugan ,Cheyyar ,Cheyyar river ,
× RELATED மனைவியை அடித்துக்கொன்று நாடகமாடிய...