×

மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனமா? உச்சநீதிமன்ற மாஜி தலைமை நீதிபதி சந்திரசூட் மறுப்பு

புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவிக்கு மாஜி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக வந்த தகவல்களை அவர் மறுத்துள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கமிட்டி கூட்டம் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் என்எச்ஆர்சி தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயர் பரிசீலனை செய்யப்படுவதாக தகவல்கள் வந்தன. இதுகுறித்து சந்திரசூட்டிடம் கேட்டபோது,‘‘ இந்த தகவல் உண்மை அல்ல. நான் தற்போது ஓய்வு வாழ்க்கையை சிறப்பாக அனுபவித்து வருகிறேன்’’ என்றார்.

The post மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனமா? உச்சநீதிமன்ற மாஜி தலைமை நீதிபதி சந்திரசூட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Human Rights Commission ,Former Chief Justice ,Supreme Court ,Chandrachud ,New Delhi ,National Human Rights Commission ,Modi ,National Human Rights Commission… ,Former ,Chief Justice ,Dinakaran ,
× RELATED பெண் தலைமைக் காவலருக்கு எதிராக மனித...