×

மன்மோகன் சிங் மறைவு வேதனை அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு வேதனை அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் முதலமைச்சர் அஞ்சலி செலுத்திய பின் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாட்டுக்கு வர காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங். தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் வர காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வர காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங் என முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.

The post மன்மோகன் சிங் மறைவு வேதனை அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Manmohan Singh ,Chief Minister ,M.K. Stalin ,Delhi ,Metro Rail ,Tamil Nadu.… ,
× RELATED தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை...