×

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது


கேப்டவுன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் 3வது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 1-1 என தொடர் சமனில் முடிந்தது. இதையடுத்து 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி கேப்டவுனில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 49.5 ஓவரில் 329 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 80, பாபர் அசாம் 73, கம்ரான் குலாம் 63, சல்மான் ஆகா 33 ரன் எடுத்தனர். தென்ஆப்ரிக்க பவுலிங்கில் குவேனா மபகா 4, மார்கோ ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 329 ரன் இலக்கை துரத்திய தென்ஆப்ரிக்க அணியில், ஹென்ரிச் கிளாசென் 97, டோனி டி ஜோர்ஜி 34, டேவிட் மில்லர் 29, வான்டர்டூசன் 23, மார்கரம் 21 ரன் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 43.1 ஓவரில் 248 ரன்னுக்கு தென்ஆப்ரிக்கா ஆல்அவுட் ஆனது. இதனால் 81 ரன் வித்தியாசத்தில் பாகி்ஸ்தான் வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது. பவுலிங்கில் அந்த அணியின் ஷாகின் ஷா அப்ரிடி 4, நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினர். கம்ரான் குலாம் ஆட்டநாயகன் விருது பெற்றார். 3வது மற்றும் கடைசி போட்டி வரும் 22ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

The post தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது appeared first on Dinakaran.

Tags : Pakistan ,South Africa ,Capetown ,Pakistan cricket ,D20 ,Saman ,Dinakaran ,
× RELATED 3வது ஒருநாள் ஆட்டத்திலும் அயூப்...