×

பழனிசாமி பொய் சொல்வது அவர் பதவிக்கு அழகல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஈரோடு: எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு பழனிசாமி பொய் சொல்வது அவர் பதவிக்கு அழகல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டதாக பழனிசாமி பொய் சொல்லுகிறார். சாத்தனூர் அணையை திறக்கும் முன்பு 5 முறை முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது. சாத்தனூர் அணையை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்ததால் 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். செம்பரம்பாக்கம் வெள்ள பாதிப்பு மனிதனால் ஏற்பட்ட பேரழிவு. ஒன்றிய அரசின் நிதிக்காக காத்திராமல் நாங்களே மீட்பு பணிகளை செய்து முடித்தோம் என தெரிவித்தார்.

The post பழனிசாமி பொய் சொல்வது அவர் பதவிக்கு அழகல்ல: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Palanisami ,Chief Minister ,Mu K. Stalin ,Erode ,Palanisamy ,K. Stalin ,SATANUR DAM ,Chattanur Dam ,
× RELATED மன்மோகன் சிங்குக்கு எனது இறுதி மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு