×

புதுக்கோட்டையில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா

 

புதுக்கோட்டை,டிச.20: புதுக்கோட்டையில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா கொண்டப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் பேராசிரியர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, எம்எம் பாலு, மாநகர செயலாளர் செந்தில், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளாமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

The post புதுக்கோட்டையில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Tags : Anbazhagan ,Pudukkottai ,DMK ,former ,general secretary ,Pudukkottai district ,Tamil Nadu ,Law Minister ,Raghupathi ,North ,District ,Chellapandiyan… ,
× RELATED கொள்கை கருவூலமாக விளங்கும் பேராசிரிய...