×

தற்காலிகமாக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை * மலைப்பகுதியில் வசிப்போருக்கு விரைவில் நிரந்தர தீர்வு * பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல் திருவண்ணாமலையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு

திருவண்ணாமலை, டிச.25: திருவண்ணாமலையில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டித்தரும் பணியை நேற்று பொதுப்பணித்துறை ஆய்வு செய்தார். அதையொட்டி, திருவண்ணாமலை ஒன்றியம், நல்லவன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் பகுதியில் 20 தற்காலிக வீடுகள் கட்டப்படுவதை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை ஆன்மிக நகரில் கடந்த 1972க்கு பிறகு அதிக அளவிலான கனமழை ெபஞ்சல் புயலின்போது பெய்தது. எதிர்பாராமல் பெய்த பெருமழையால், மலை குளர்ச்சி அடைந்து மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு ஒரு வீட்டின் மீது மோதியது. அதனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இயற்கை எய்தினர். அதையொட்டி, அங்குள்ள குடும்பத்தினர் பயத்தினால் அந்த பகுதியில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என என்னிடம் கோரிக்கை வைத்தனர். எனவே, தற்காலிகமாக அவர்களை தங்க வைக்கலாம் என திட்டமிட்டோம். நிரந்தரமாக வீடு கட்டி அவர்களுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது, வஉசி நகர் பகுதியில் 20 குடும்பங்கள் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளன. எனவே, வேறொரு இடத்தில் வாடகை வைத்திருக்கிறோம். மேலும், அரசுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக ஷெட் அமைத்து 20 வீடுகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும், பொங்கல் திருநாளில் குடியமரத்தபடுவார்கள். மேலும், சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது. திருவண்ணாமலை மலைப்பகுதியில் வீடு கட்ட கூடாது. இது ஆன்மிக ஊர். மலையே கடவுளாகத்தான் வணங்குகின்றனர். மலையை மையமாக வைத்து 14 கிமீ தூரம் கிரிவலம் செல்கின்றனர் என் வழக்கு தொடரப்பட்டு தற்போது நடந்து வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிதிபதி தலைமையில் கமிஷன் அமைத்திருக்கிறது. மூன்று முறை ஆய்வு நடத்தியுள்ளனர். எனவே, மலைப்பகுதியில் பட்டா இல்லாமல் வீடு கட்டியிருப்பதவர்கள், பட்டா வைத்திருப்பவர்களில் அங்கிருந்து வெளியேற விரும்புகிறவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து உள்ளது. எனவே, இது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று தீர்வுகாணுமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறேன். கலெக்டரும் இது தொடர்பான அறிக்கையை முதல்வருக்கு அனுப்ப உள்ளார். அது ெதாடர்பாக, முதல்வர் உரிய முடிவு எடுப்பார். தற்காலிகமாக, 20 குடும்பங்களை குடி வைப்பதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஸ்ரீதரன், ப.கார்த்திவேல்மாறன், பிரியா வியஜரங்கன், துரை.வெங்கட், அரசு வழக்கறிஞர்கள் டி.எம்.கதிரவன், எஸ்.கண்ணதாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post தற்காலிகமாக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை * மலைப்பகுதியில் வசிப்போருக்கு விரைவில் நிரந்தர தீர்வு * பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல் திருவண்ணாமலையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு appeared first on Dinakaran.

Tags : Public Works ,Minister ,E.V.Velu ,Tiruvannamalai ,Public Works Department ,Tiruvannamalai… ,
× RELATED சென்னையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை...