×

அம்பேத்கரை வெறுத்தவர் நேரு : அம்பேத்கர் விவகாரத்தில் பொய் சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்: பாஜ தலைவர் நட்டா காட்டம்

புதுடெல்லி: அம்பேத்கர் விவகாரத்தில் பொய் சொல்வதை காங்கிரஸ் நிறுத்தி கொள்ள வேண்டும் என பாஜ தலைவர் நட்டா காட்டமாக தெரிவித்துள்ளார். பாஜ தேசிய தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா தன் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:  டாக்டர் அம்பேத்கர் மீதான காங்கிரசின் ஆழ்ந்த வெறுப்புகளை விளக்க சில உண்மைகளை பகிர்ந்து கொள்கிறேன். உண்மையில் அம்பேத்கரை ஜவஹர்லால் நேரு வெறுத்தார். அது வடிக்கட்ட முடியாத வெறுப்பு.

அதனால்தான் நேரு அம்பேத்கரை இரண்டுமுறை தோற்கடித்தார். அத்துடன் தன் அமைச்சரவையில் அம்பேத்கர் இல்லை என்ற மகிழ்ச்சியை வௌிநாட்டில் உள்ளவர்களுக்கு பெருமையாக எழுதி கொண்டிருந்தவர் நேரு. தலைநகர் டெல்லியின் அலிபூர் சாலையில் உள்ள வீட்டில் அம்பேத்கர் இறந்தார். அந்த வீடு மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல ஆண்டுகளுக்கு முன்பே நினைவகமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அம்பேத்கரை வெறுத்த காங்கிரஸ் அதை செய்யவில்லை.

பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் அம்பேத்கர் இல்லத்தை நினைவு சின்னமாக மாற்றியது. காங்கிரசில் உள்ள சமூகநீதியின் சுயநல பிரகடன பாதுகாவலர்கள் மும்பையில் அம்பேத்கர் தகனம் செய்யப்பட்ட சைத்ய பூமியில் பிரம்மாண்ட நினைவிடம் அமைப்பதாக வெற்று வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் அதற்கான நிலபரிமாற்றத்தை 2015ல் உறுதி செய்தது பாஜ அரசுதான். அண்மைகாலமாக பிரதமர் மோடி அங்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களில் மோசமாக செயல்பட்டு படுதோல்வி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள் வௌிநாடுகளுக்கு சென்று இந்தியா பற்றி பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். எனவே அம்பேத்கர் விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்வதை காங்கிரஸ் கட்சி நிறுத்தி கொள்ள வேண்டும்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

The post அம்பேத்கரை வெறுத்தவர் நேரு : அம்பேத்கர் விவகாரத்தில் பொய் சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்: பாஜ தலைவர் நட்டா காட்டம் appeared first on Dinakaran.

Tags : Nehru ,Congress ,Ambedkar ,BJP ,Nattha Kattam ,New Delhi ,national president ,Union Minister ,J.P. Nadda ,Dr. ,Ambedkar… ,
× RELATED முன்னாள் பிரதமர் நேரு குறித்து...