×

வருசநாடு அருகே மழைக்கு இடிந்து விழுந்த மண்சுவர் வீடு

வருசநாடு, டிச. 20: வருசநாடு அருகே, மழைக்கு மண்சுவர் வீடு இடிந்து விழுந்தது. தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட சீலமுத்தையாபுரம் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அப்பகுதியில் மண் சுவர் வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இப்பகுதியில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இப்பகுதியில் பெய்த கனமழைக்கு அவரது வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த மேகமலை கிராம நிர்வாக அலுவலர் விஜய்முருகன் சேதமடைந்த வீட்டை ஆய்வு செய்தார். மேலும், கனமழையால் வேறு ஏதேனும் வீடுகள் சேதமடைந்துள்ளதா? என வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வருசநாடு அருகே மழைக்கு இடிந்து விழுந்த மண்சுவர் வீடு appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Mahendran ,Seelamuthaiyapuram ,Thummakundu ,Kadamalai ,Mayilai Union ,Theni district ,Mud ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டு மூல வைகை ஆற்றில்...