×

மானூர் அரசு கல்லூரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டி பரிசளிப்பு

தியாகராஜநகர், டிச.20:அய்யன் திருவள்ளுவரின் 133 அடிஉயர சிலை கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் வகையில் நெல்லை மாவட்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் மானூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் 12 கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். குறும்படங்கள், திரைச்சுருள்கள், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் டாரதி சான்றிதழ் அளித்தார். பழனிசெல்வம் நன்றி கூறினார்.

The post மானூர் அரசு கல்லூரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டி பரிசளிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar ,Silver Jubilee ,Manur Government College ,Thiagarajanagar ,Ayyan Thiruvalluvar ,Kanyakumari ,Nellai District College ,Manur Government Arts and Science College ,Jubilee ,
× RELATED வள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா...