திருவள்ளூர்: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி 1.1.2025ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் – 2025 மேற்கொள்வது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், வெளிநாட்டு வாக்காளர் ஒருவர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது, வாக்காளர் பட்டியலில் இருந்து இறப்பு, இடம் பெயர்வு, இரட்டை பதிவு ஆகியவற்றை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் ஆகியவைகள் தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்வதற்காக 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
மேலும் 28.11.2024 வரை படிவங்கள் பெறப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் படிவங்களும், 24.11.2024 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் பெறப்பட்ட படிவங்கள் மீது வரும் 24.12.2024 க்குள் வாக்காளர் பதிவு அலுவலர்களால் முடிவு எடுக்கப்பட்டு 6.1.2025 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, பெறப்பட்ட படிவங்களில் புதிய வாக்காளர், ஒரே தொகுதிக்குள் பாகம் மாறுதல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட படிவங்களை திருவள்ளுர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அணில் மிஸ்ரம் நேரில் சென்று மேலாய்வு மேற்கொண்டார்.
முன்னதாக திருவள்ளுர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அணில் மிஸ்ரம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஆ.கற்பகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சத்தியபிரசாத், வட்டாட்சியர்கள் திருவள்ளுர் செ.வாசுதேவன், (தேர்தல்) சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மப்பேடு சமத்துவபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு appeared first on Dinakaran.