×

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் 26ம் தேதி ரிலீசாகிறது

சென்னை: அருள்நிதி நடிப்பில் உருவாகி வந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இறுதிகட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அருள்நிதி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் படக்குழுவினர் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

போஸ்டரில் ’கழுவேத்தி மூர்க்கன்’ மே 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம ராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசை. தர் ஒளிப்பதிவு. நாகூரான் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தில் நடித்த துஷாரா நடித்துள்ளார்.

The post அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் 26ம் தேதி ரிலீசாகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arulnidhi ,Chennai ,Arul Nidhi ,Ushlethi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...