×

சங்கரன்கோவிலில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில், டிச.19: சங்கரன்கோவிலில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஜிடிஎஸ் ஊழியர்களை பணிச்சுமை அதிகமாக வழங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதை நிறுத்த வேண்டும், ஜிடிஎஸ், எம்டிஎஸ் முடிவுகளை காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தற்போது மீண்டும் பணிக்கு சேர்ந்த நிலையில் அவர்களுக்கு சேர வேண்டிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க சங்கரன்கோவில் கிளை தலைவர் முருகன், செயலாளர் பண்டாரம், பொருளாளர் ஜார்ஜ், அஞ்சல் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பின் சங்கரன்கோவில் செயலாளர் கோமதி சங்கர் மற்றும் முன்னாள் மாநில தலைவர் ராமராஜ் உள்ளிட்ட பல்வேறு அஞ்சல் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சங்கரன்கோவிலில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sankarankovil ,All India Rural Postal Employees Association ,GTS ,MTS ,Dinakaran ,
× RELATED ரயில் முனையமாக தென்காசியை மாற்ற வேண்டும்