×

சிவகிரி ஜிஹெச்சில் மருத்துவ இணை இயக்குநர் திடீர் ஆய்வு

சிவகிரி, டிச.19: சிவகிரி அரசு மருத்துவமனையில் தென்காசி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்ட அவர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பணி பதிவேடுகளை ஆய்வு செய்தார். மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் மழைக்கால நோய்கள் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து காய்ச்சல் தொடர்பான மருந்துகளின் இருப்பை ஆய்வு செய்தார்.

The post சிவகிரி ஜிஹெச்சில் மருத்துவ இணை இயக்குநர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sivagiri GH ,Sivagiri ,Tenkasi District Medical Services ,Joint Director ,Premalatha ,Sivagiri Government Hospital ,Dinakaran ,
× RELATED சிவகிரி அருகே 10 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த பெண் மரணம்