×

தொடர் மழையால் ஆர்.கே.பேட்டையில் நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

ஆர்.கே.பேட்டை, டிச. 19: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. இந்நிலையில், மழை பெய்து ஓய்ந்த நிலையில் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் செல்லாத்தூர் கிராம விவசாயிகள், மீண்டும் நெல் நாற்றினை நடும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர்மழையால் ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விளக்கணாம்பூண்டி புதூர், பாலாபுரம், வேலன் கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், அம்மனேரி, கொண்டாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் நாற்று விட்டு, நடும் பணியில் ஈடுபட்டனர்.தற்போது, ஆடுதுறை 37, ஆடுதுறை 45, பி.பி.டி.,912, சோனா மசூரி போன்ற நெல் ரக பயிர்களால் அதிகளவில் மகசூல் பெற முடியும் என்பதால், பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதற்கு மாறியுள்ளனர்.

The post தொடர் மழையால் ஆர்.கே.பேட்டையில் நெல் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : R. K. Hood ,Thiruvallur district ,Thiruthani ,R. ,Bhatta ,K. ,
× RELATED திருவாலங்காடு அருகே ஏரி மதகில் நீர் கசிவை தடுக்க மணல் மூட்டைகள்