×

பாஜவினர் அனைவரும் அம்பேத்கருக்கு எதிரானவர்கள்: திருமாவளவன் பேட்டி

புதுடெல்லி: வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: உள்துறை அமைச்சரான அமித் ஷா காங்கிரஸ் மீது விமர்சனம் வைக்கிறோம் என்ற பெயரில் அம்பேத்கர் மீது விமர்சனம் வைத்துள்ளார் அம்பேத்கருக்கும் காங்கிரசுக்குமான முரண்பாடு தேர்தல் முரண்பாடு. ஆனால் அம்பேத்கருக்கும் பாஜகவுக்கு இருக்கும் முரண்பாடு கருத்தியல் ரீதியான முரண்பாடு ஆகும். அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நாடு செயல்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத அமித்ஷா பேசியிருக்கிறார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம் தெரிவிக்கிறது. அமித் ஷா மட்டும் அம்பேத்கருக்கு எதிரானவர் அல்ல பிரதமர், மற்ற பாஜவினர் அனைவரும் எதிரானவர்கள்தான். பிரதமர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.. இவ்வாறு அவர் கூறினார்.

துரை வைகோ: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அரசியலமைப்பு சட்டத்தை வடித்து தந்த டாக்டர் அம்பேத்கரை அரசியல் சாசனத்தின் படி அமைந்திருக்கும் நாடாளுமன்றத்திலேயே உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது பாஜவின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது ’’ என கூறியுள்ளார்.

The post பாஜவினர் அனைவரும் அம்பேத்கருக்கு எதிரானவர்கள்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Ambedkar ,Thirumavalavan ,New Delhi ,V.C.K. ,Delhi ,Home Minister ,Amit Shah ,Congress ,
× RELATED அம்பேத்கர் பெயருக்கு பின்னால்...