சென்னை: அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார், சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: அம்பேத்கரைப் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார்.
அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம். அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும்தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. சங்பரிவார்கள் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார்; சதிமுயற்சிகள் சாம்பலாகும்.! திருமாவளவன் பதிவு appeared first on Dinakaran.