சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்காக ஆன்லைன் வழியாகவும், அந்தந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கவுன்ட்டர்கள் மூலமாகவும் டிக்கெட் பெற்று பயணம் செய்கின்றனர். ஆனால் நேற்று காலை பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற முயன்ற நிலையில் சர்வர் கோளாறு ஏற்பட்டு டிக்கெட் பெற முடியவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சர்வர் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதுவரை கவுன்ட்டர்களில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. அதனை தொடர்ந்து சிறிதுநேரத்தில் மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை சீரானதாக நிர்வாகம் அறிவித்தது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
The post மெட்ரோ ரயில் சர்வர் கோளாறு முடங்கிய ஆன்லைன் டிக்கெட் appeared first on Dinakaran.