×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி அடையாள அட்டை தயாரித்து விஐபி தரிசனம்: ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது

திருமலை: திருப்பதியில் உள்ள என்சிசி கேன்டீனில் மேலாளராக ராணுவ வீரரான பிரம்மையா பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராணுவத்தில் பிரிகேடியர் பதவியில் இருப்பவர்கள் மட்டும் ஏழுமலையான் கோயிலில் புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனத்திற்கு தகுதியானவர்கள். ஆனால் பிரம்மையா பலருக்கு பெரிய பதவியில் இருப்பதாக போலி அடையாள அட்டை தயார் செய்து கொடுத்து விஐபி தரிசனத்துக்கு விண்ணப்பித்து டிக்கெட் பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே ராணுவத்தில் கர்னலாக உள்ள விஸ்வபிரசாத் பெயரில் பிரிகேடியர் பதவியுடன் போலி அடையாள அட்டை தயார் செய்த பிரம்மையா புரோட்டோகால் தரிசனத்துக்கு 4 பேருக்கு உண்டான ரூ.2000 மதிப்புள்ள டிக்கெட் பெற்று ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார். தொடர்ந்து விஸ்வபிரசாத் நேற்று சுவாமி தரிசனத்திற்கு செல்லும்போது தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் பிரம்மையா நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு சோதனை மேற்கொண்டனர்.

விஜிலென்ஸ் அதிகாரிகளின் சோதனையில் போலி அடையாள அட்டை விவகாரம் அம்பலமானது. இதனையடுத்து ராணுவ வீரர் பிரம்மையாவை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் ராஜு மற்றும் போலி அடையாள அட்டை தயார் செய்து கொடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி அடையாள அட்டை தயாரித்து விஐபி தரிசனம்: ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,VIP Darshan ,Tirumala ,Brahmaiah ,Tirupati ,Ezhumalaiyan Temple ,
× RELATED கூட்ட நெரிசலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்...