×

தரவரிசை பட்டியலில் நியூசிக்கு 4ம் இடம்

இங்கிலாந்துடனான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசைப்பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெற்றியால், நியூசிலாந்து அணி 6ம் இடத்தில் இருந்து 48.21 சதவீத வெற்றியுடன் 4ம் இடத்துக்கு உயர்ந்துள்ளது.

இலங்கை அணி 45.45 சதவீதத்துடன் 5ம் இடத்திலும், இங்கிலாந்து 43.18 சதவீத வெற்றியுடன் 6ம் இடத்திலும் உள்ளன. பட்டியலின் முதலிடத்தில் 63.33 சதவீத வெற்றியுடன் தென் ஆப்ரிக்கா உள்ளது. 2ம் இடத்தில் 60.71 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியாவும், 3ம் இடத்தில் 57.29 சதவீத வெற்றியுடன் இந்தியாவும் உள்ளன. வரும் 2025ல் ஜூன் மாதத்திற்குள் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதும்.

The post தரவரிசை பட்டியலில் நியூசிக்கு 4ம் இடம் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,England ,World Test Championship ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED பென் ஸ்டோக்ஸ் 3 மாதம் ஆட முடியாது: தொடை சவ்வு காயத்தால் அவதி