×

ராஜபாளையத்தில் போலீசாரை தாக்கிய 6 பேர் மீது குண்டாஸ்

ராஜபாளையம், டிச.18: ராஜபாளையத்தில் போலீசாரை தாக்கிய 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ராஜபாளையம் கீழ ஆவரம்பட்டி பகுதியில் ஒரு புகார் தொடர்பாக சமீபத்தில் விசாரணைக்கு சென்ற வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் கருப்பசாமி, மற்றொரு காவலர் ராம்குமார் ஆகியோரை மது போதையிலிருந்த சிலர் தகராறு செய்து கம்பால் சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முக்கிய குற்றவாளிகளான கீழாபுரம்பட்டி பாரதியார் தெரு, பொன்னுச்சாமி மகன் பால்பாண்டி(31), மலைக்கள்ளன் மகன் பாஞ்சாலிராஜா(41), மகாலிங்கம் மகன் தர்மலிங்கம் என்ற வெள்ளையன்(32), மகாலிங்கம் மகன் கருப்பசாமி(25), சேவகன் மகன் முத்துராஜ்(34), மாரிமுத்து மகன் மணிகண்டன்(19) ஆகிய 6 பேர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இவர்களை குண்டர் தடுப்புச் சட்ட காவலில் வைக்க இன்ஸ்பெக்டர் அசோக்பாபு, டிஎஸ்பி பிரீத்தி ஆகியோர் மாவட்ட எஸ்பி கண்ணனிடம் ஆவணங்களை சமர்ப்பித்தனர். எஸ்பியின் பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் ஆறு பேரும் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டக் காவலில் அடைக்கப்பட்டனர்.

The post ராஜபாளையத்தில் போலீசாரை தாக்கிய 6 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Goondas ,Rajapalayam ,Head ,Karuppasamy ,North ,Police Station ,Lower Avarampatti ,Dinakaran ,
× RELATED குண்டர் சட்டத்தில் இரண்டு பேர் கைது