- வங்கம்
- அமைச்சர்
- எம்.ஆர்.கே
- பன்னீர் செல்வம்
- சென்னை
- சென்னை ஜெனரல்
- செயலகம்
- வங்காள புயல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை இயக்குநர்கள்
- தோட்டக்கலை
- துறை
- வங்கேல் புயல்
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் மற்றும் பருவ மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள், தோட்டக்கலை துறை துணை இயக்குநர்களுடன் காணொலி வாயிலாக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் 2,86,069 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 73,263 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக 2,25,655 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 45,634 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. மொத்தம் இதுவரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 2906 மெ.டன் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன.
பயிர் சேத பரப்பு கணக்கீட்டு பணியை இன்றைக்குள் (17ம் தேதி) முடித்து, மாநில பேரிடர் நிவாரண தொகையினை விவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத் தரும் வகையில் உரிய கருத்துரு அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டினை ஈடுகட்டும் விதமாக, பயிர் காப்பீட்டின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிக்க புள்ளியியல் துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவனங்களுடன் 17.12.2024 கூட்டம் இன்று நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு காரணமாக 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம்: கணக்கீட்டு பணியை முடிக்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவு appeared first on Dinakaran.