×

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மசோதா: ஆளுநர் ரவி ஒப்புதல்

சென்னை: கடந்த 2001ல் தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டத்தில், மாநில நெடுஞ்சாலைகள் அமைப்பு, நெடுஞ்சாலைகள் அதிகார அமைப்புக்கு பதில் மாநில தலைமை நிர்வாகி, நிர்வாகிகள் என மாற்றுவதற்கான சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகம் செய்தார். கடந்தாண்டு ஏப்.1ம் தேதி, பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமுன்வடிவையும் அவர் அறிமுகம் செய்தார்.

நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்த உடனடி, நீண்டகால திட்டம் தயாரித்தல், பன்னாட்டு நிதியை கொண்டுவருவதற்கான மாதிரிகளை உருவாக்குவது ஆணையத்தின் பணி. ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போல, மாநிலத்துக்கென தனி ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றுக்காக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழு நேர உறுப்பினர்கள், 3 பகுதி நேர உறுப்பினர்கள் இருப்பர். உறுப்பினர்கள் 62 வயது வரை பணியாற்றலாம். நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும் தரம் உயர்த்துவதற்கும், உடனடி மற்றும் நீண்டகால திட்டங்களை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் தயாரிக்கலாம். தனியாருடன் அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மசோதா: ஆளுநர் ரவி ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Chennai ,Minister ,E.V. Velu ,State Highways Authority ,State ,Executive ,Tamil Nadu State ,Dinakaran ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்...